கள்ளக்குறிச்சி: வருமானம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் அரசிடம் நிவாரணம் வேண்டி மன்றாடி நிற்கும் காட்சி வேதனைக்குரியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பகுதியான ஆண்டி கொட்டாய் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு வசிப்பவர்கள் அனைவரும் வளையல் வியாபாரம், பாத்திரம் வியாபாரம், ஸ்டவ் சரி செய்வது போன்ற தொழிலை செய்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கேரள அரசின் கரோனா உதவி வலைதளம் மீண்டும் செயலுக்கு வந்தது !
இச்சூழலில் எங்களது வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எங்கள் தொழிலை தினம்தோறும் செய்தால்தான் எங்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கே வழி கிடைக்கும் எனவும், ஆனால் தற்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முப்பது நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளதால் சோற்றுக்கே அல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமத்தினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
எல்லோருக்கும் நிவாரண உதவிகளையும், குடும்ப அத்திவாசியப் பொருட்களையும் பல்வேறு அமைப்புகளும், அரசும் வழங்கி வருகின்றன. ஆனால் எங்களுக்கு எந்தவித நிவாரண உதவியும் செய்ய யாரும் முன்வரவில்லை, நாங்கள் மிகவும் வறுமையில் வாடுகிறோம். நாங்கள் ஆடம்பரமாக வாழ்பவர்கள் அல்ல, தினம்தோறும் இத்தொழிலை நம்பி இருப்பவர்கள் நாங்கள் வேலைக்குப் போனால் தான்; வயிற்றுக்கு கஞ்சி கிடைக்கும். நாங்கள் ருசிக்கு கேட்கவில்லை, பசிக்கு தான் கேட்கிறோம் என்று, தங்கள் குறைகளைக் கூறி புலம்புகின்றனர் கிராமத்தினர்.
நாங்கள் விற்கும் பாத்திரத்தில் மற்றவர்கள் சாப்பாடு செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எங்கள் நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. திருவிழாக் காலங்களில் பிறருக்கு வளையல் அணிவித்து, நாங்கள் அழகு பார்ப்போம். ஆனால் எங்கள் வாழ்க்கையோ அலங்கோலமாக இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்கு இச்சமயத்தில் அத்தியாவசியப் பொருளை கொடுத்து உதவுங்கள். நாங்கள் என்றுமே உங்களுக்கு நன்றி கடனோடு இருப்போம்.
எங்களுக்கு வேற எதுவும் தேவை இல்லை. அத்தியவாசியப் பொருட்கள் கொடுத்தாலே போதுமானது என்று தமிழ்நாட்டு அரசிடம் ஆண்டிக் கொட்டாய் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.