கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் ரங்கா நகர்ப்பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று (பிப் 26) மாலை 4 மணியளவில் தாய் சரோஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் சிகிச்சை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 40 பவுன் நகை, ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போய் உள்ளது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிந்தராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் கொள்ளை