கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, ராஜலட்சுமி தம்பதி. இவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த தங்க நகையைத் திருடிச் சென்றனர்.
மேலும் அவர்கள் தடயங்களை அழிப்பதற்காக வீட்டிலிருந்த இட்லி பொடியைத் தூவியுள்ளனர். பின்னர் தூங்கி எழுந்த தம்பதிக்கு வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து பீரோவில் பார்த்தபோது 12 சவரன் தங்க நகை காணாமல்போய் இருந்தது.
இது குறித்து பழனிசாமி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திருட்டு நகை வாங்கிய அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவு!