ETV Bharat / state

மினி வேன் கவிழ்ந்து விபத்து - பயணிகள் படுகாயம் - tamil latest news

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்து மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

மினிவேன் கவிழ்ந்து விபத்து
மினிவேன் கவிழ்ந்து விபத்து
author img

By

Published : May 9, 2020, 8:03 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 44 பேர் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணியை முடித்துவிட்டு ஒரு மினி வேனில் அவர்களின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்த மினி வேனை முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்கி என்ற இளைஞர் ஓட்டிச் சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன் மாதேவி கிராமத்தைக் கடந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், தாறுமாறாக ஓடி சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மினிவேன் கவிழ்ந்து விபத்து

இதில் மினி வேன் ஓட்டுநர், அதில் பயணம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 44 பேர் என அனைவரும் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு காவல் துறை வாகனங்களிலும், 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த கூலித் தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் மகளுக்கு கரோனா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.