ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் - கள்ளக்குறிச்சி அண்மைச் செய்திகள்

140 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் உள்ளிட்டோருக்கு, ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை, உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Jun 19, 2021, 7:28 AM IST

கள்ளக்குறிச்சி: கரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 140 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட உயர்க் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை, 10 கிலோ அரிசி, 15 விதமான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : விபத்தில் இறந்தவரின் மகளை வைத்தே சாலையைத் திறக்கச்செய்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.