ETV Bharat / state

சொத்து தகராறில் தாத்தா அடித்துகொலை! பேரன், பேத்திக்கு வலைவீச்சு! - kallakuruchi latest news

கள்ளக்குறிச்சி: சொத்திற்காக தாத்தாவை பேரனும், பேத்தியும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kallakuruchi-murder-issue
kallakuruchi-murder-issue
author img

By

Published : Oct 11, 2020, 4:02 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர்மன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி சம்பூர்ணம் தம்பதியினர்.

இவர்களுக்கு நான்கு மகள் ஒரு மகன் உள்ளனர். விவசாயியான வீராசாமி என்பவருக்கு சொந்தமாக சுமார் 50 சென்ட் நிலம் உள்ளது.

மூத்தமகள் ராணி என்பவரை கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

அங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ராணிக்கும் அவரது கணவன் குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ராணி தனது மகள் ராஜலட்சுமி, மகன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் நகர்மன்னார்குடி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீராசாமிக்கு சொந்தமாக உள்ள விளைநிலத்தில் ஐந்து சென்ட் இடத்தில் ராணி ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

ராணியை அவரது சொந்த கிராமத்திற்கு செல்ல வீராசாமி பலமுறை வற்புறுத்திய நிலையில் தனது மகள் ராஜலட்சுமியை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ராணி தனது தம்பி ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்,

இதையடுத்து, ராணி அந்த வீட்டை காலி செய்யாமல் அந்த இடத்தை தனது பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏழுமலைக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தனது மகன் வழி பேரன் பிள்ளைகளுக்கு தனது சொத்து கிடைக்க வேண்டும் என நினைத்து ஏழுமலையின் பெயரில் வீராசாமி அந்த இடத்தை உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்து வைத்துள்ளார்.

இதனால் ராணி குடியிருக்கும் வீடு தனக்கு கிடைக்காது என்பதால் அவரது மகள் ராஜலட்சுமியை வைத்து அடிக்கடி வீராசாமி, ஏழுமலை இடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அக்.9ஆம் தேதி, ராஜலட்சுமியும் அவரது தம்பி மோகன்ராஜ் இருவரும் சேர்ந்து ஏழுமலை, வீராசாமியிடம் மோகன்ராஜ் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டுமென கேட்டு தகராறு செய்துள்ளனர்.

தகராறு கைகலப்பாக மாறி ராஜலட்சுமியும், மோகன்ராஜ் சேர்ந்து வீராசாமியையும், ஏழுமலையும் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதோடு, வீராசாமியை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது வயிற்றில் போற்றும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த வீராசாமி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து உடனடியாக வீராசாமி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்ற தாய் - காவல் துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.