கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஜூன் 14ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் முடிவில், கண்காணிப்பாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனிடையே அவருடன் பணியாற்றிய சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிகிச்சைக்காக செல்லும் முன் தன்னுடன் பணியாற்றிய காவல் துறை ஆய்வாளர்கள், அலுவலர்களையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பை கவனித்துக் கொள்வார் என காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.