ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவரம் - விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு - 18 member committee constituted to investigate

கள்ளக்குறிச்சி கலவர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு
விசாரிக்க 18 பேர் கொண்ட குழு அமைப்பு
author img

By

Published : Jul 20, 2022, 11:01 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாட்ஸ்-அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள 18 காவல் துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குழுவில் 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நாளை சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள காவல் துறை அலுவலர்கள் சேலம் சரக டிஐஜி முன்பு காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழுவில் இடம்பெற்றுள்ள டி.எஸ்.பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மைக் பொருத்தப்பட்ட அலுவலக வாகனத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும், வாகனத்திற்கு தேவையான எரிபொருளை முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும் என உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலுவலர்களைத் தவிர மாற்று அலுவலர்களை அனுப்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பில் பங்கேற்ற காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.