கரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கட்சி பாகுபாடுகளின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள நகர ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், டாடா ஏசி ஓட்டுனர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவிலியர்கள் மற்றும் நரிக்குறவர்கள் ஆகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் அடங்கிய பொருள்கள், முகக் கவசங்கள் கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன் கௌதம சிகாமணி வழங்கினார். பயனாளிகள் நிவாரண பொருள்களை சமூக இடைவெளி கடைபிடித்து நின்று பெற்றுக்கொண்டனர்.
இதையும் பார்க்க: 'ஊரடங்கில் பதியப்படும் வழக்குகள் எதிர்காலத்தைப் பாழாக்கும்' - இளைஞர்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை