கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிமுக்தா அணையின் 36 அடியில், 35.5 அடி தண்ணீர் நிரம்பியிருந்தது. இச்சூழலில் நேற்று (ஜனவரி 7) பெய்த மழையின் காரணமாக அணைக்கு தொடர்ந்து 5,165 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு தற்போது 5,165 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் மணிமுக்தா ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் தண்ணீர் அதிகரித்து அருகிலுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அதுமட்டுமின்றி மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை காண கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அணைக்கு வந்து அணையை ரசித்து செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக தற்போது மணிமுக்தா மாறிவருகிறது. 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணையில், கல்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழைநீர் மணி மற்றும் முக்தா ஆறுகளின் வழியாகவும், பாப்பாங்கல் ஓடை வழியாகவும் அணைக்கு வந்துசேர்கிறது.