ETV Bharat / state

கள்ளக்குறிச்சி வருவாய் அலுவலர், துணை ஆட்சியருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 1, 2020, 3:30 PM IST

கள்ளக்குறிச்சி: மாவட்ட வருவாய் அலுவலருக்கும் துணை ஆட்சியருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kallakurichi district revenue officer and deputy collector tested positive

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் தொடர் கரோனா தடுப்பு பணிகளில் அயராது உழைத்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும், துணை ஆட்சியருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் அவரவர் குடியிருப்புகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர், கார் ஓட்டுநர் உள்ளிட்ட வருவாய்த் துறையினருக்கும், துணை ஆட்சியரின் கார் ஓட்டுநர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருவது ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், மாவட்டத்தில் மக்களுக்காக தொடர் களப்பணி ஆற்றி வந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...அவசர காலம், காங்கிரஸின் சுயநல அரசியலை நினைவுப்படுத்துகிறது- பாஜக ராம் மாதவ்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.