ETV Bharat / state

சாராய ஊறலை அழித்து கள்ளக்குறிச்சி போலீஸார் அதிரடி! - illegal liquor seized by police in kallakurichi

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலை பகுதியில் 2,350 லிட்டர் சாராய ஊறலை அழித்து மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சாராய ஊறலை அழித்து போலீஸார் அதிரடி
சாராய ஊறலை அழித்து போலீஸார் அதிரடி
author img

By

Published : Feb 2, 2021, 5:02 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா, கரியாலூர் தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல்துறையினர் மேல்வாழப்பாடி, மல்லிகைப்பாடி, முண்டியூர் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது வாழப்பாடி ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,600 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து, சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதைப்போல மல்லிகைப்பாடி கிராமத்தில் உள்ள ஓடையில் ஐந்து பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்.

இதுதொடர்பாக மல்லிகைப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவருகின்றனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை எடுத்து கள்ளச் சாராயம் இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க... சீர்காழியில் கள்ளச்சாராயம் விற்பனை: கண்டுகொள்ளாத போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.