ETV Bharat / state

’திமுக வென்றால் திருடர்கள் வென்ற மாதிரி’ - நடிகை விந்தியா

கள்ளக்குறிச்சி: திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டமளிப்பு விழா, பாராட்டு விழா என விழாக்கள் கொண்டாடுவதற்கே அவர்களுக்கு நேரம் இருக்காது என நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Mar 31, 2021, 8:50 PM IST

vindhya
vindhya

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலாளர் நடிகை விந்தியா பேசியபோது, ”10 ஆண்டுகளாக கோரப் பசியில் உள்ள திமுக ஆட்சிக்கு வந்தால் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக வைத்து செயல்படும். பிறகு மேலும் ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடும். அதிமுக வெற்றி பெற்றால் ஜனநாயகம் வெற்றி பெறும். ஆனால், திமுக வெற்றி பெற்றால் திருடர்கள் கூட்டம் வெற்றி பெறும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டமளிப்பு விழா, பாராட்டு விழா, சினிமா விழா, சின்னத்திரை விழா என விழாக்கள் கொண்டாடுவதற்கே அவர்களுக்கு நேரம் இருக்காது. ஆகவே, தாலிக்கு தங்கம் 8 கிராம், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து போன்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிய இந்த நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள்” எனப் பேசினார்.

’திமுக வென்றால் திருடர்கள் வென்ற மாதிரி’ - நடிகை விந்தியா

இதையும் படிங்க: முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும் நீட் தேர்வு ரத்து - தயாநிதி மாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.