ETV Bharat / state

சின்னசேலம் அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

சின்னசேலம் அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...4 பேர் படுகாயம்

author img

By

Published : Sep 13, 2022, 10:10 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லாமலும் இருக்கின்ற கட்டடங்களும் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

இதில் பரத் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 11 தையல் போடப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா, மதுமிதா சிம்ரன் ஆகிய மூன்று மாணவிகளுக்கு லேசான காயங்களுடன் உடனடியாக நயினார்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாணவன் பரத் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திரா, மாணவன் பரத் சிகிச்சைப்பெற்று வரும் அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, மாணவனிடம் நேரில் நலம் விசாரித்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காயப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காயப்பட்ட மாணவன் பரத், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பெற்றோர்கள் வைத்த கோரிக்கையினை அடுத்து மாணவன் பரத் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சின்னசேலம் அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் படுகாயம்

இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உதவிப்பேராசிரியர் சஸ்பெண்ட் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.