ETV Bharat / state

70 ஏக்கர் ஆக்கிரமிப்பு: திருநாவலூர் ஏரியின் குடிமராமத்துப் பணியை தடுத்துநிறுத்திய விவசாயிகள்! - Citizenship Work

கள்ளக்குறிச்சி: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட திருநாவலூர் ஏரியின் 70 ஏக்கர் நிலத்தை மீட்கும்வரை, குடிமராமத்துப் பணிகளைச் செய்யவிட மாட்டோம் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jun 27, 2020, 9:45 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் பயன்பாட்டைக் கொண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசனம் செய்யப்பட்டுவருகிறது.

இந்த ஏரியில் மதகுக் கரை உள்ளிட்ட பகுதிகளில் தனி நபர்கள் பலர் தங்களின் சுயநலத்திற்காக ஏரியின் இடமான சுமார் 70 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 26) அந்த ஏரியை ரூபாய் 69 லட்சம் மதிப்பில் குடிமராமத்துத் திட்டத்தில் சீரமைக்க பொதுப்பணித் துறை அலுவலர்கள் வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த திருநாவலூர் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் திரண்டனர்.

அப்போது ஏரியை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டு அதையும் சேர்த்து முழுமையாக திருநாவலூர் ஏரியின் இடங்களில் குடிமராமத்துப் பணியை செய்ய வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பொதுப்பணித் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே குடிமராமத்துப் பணிகள் செய்யப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். விவசாயிகளின் இந்தத் திடீர் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்: பொள்ளாச்சி ஜெயராமன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.