ETV Bharat / state

'பொங்கல் பரிசு தொகையாக திமுக அரசு ரூ.5,000 வழங்குங்க'- ஈபிஎஸ் வலியுறுத்தல் - ஸ்டாலின்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு தொகையாக திமுக அரசு வழங்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகையாக திமுக அரசு ரூ.5,000 வழங்குக- இபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : Jan 3, 2023, 8:35 PM IST

'பொங்கல் பரிசு தொகையாக திமுக அரசு ரூ.5,000 வழங்குங்க'- ஈபிஎஸ் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு, 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பத்தினருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை, தன்சொந்த செலவில் மறுசீரமைப்பு செய்துகொடுத்தார்.

இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக ரூ.10,000 மதிப்புள்ள பாசிமணி, ஊசிமணி உள்ளிட்ட அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை வழங்கி அவர்களோடு, அமர்ந்து சிற்றுண்டி மற்றும் தேனீர் அருந்தி சிறப்புரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக அரசு நரிக்குறவர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில், இலவச மடிக்கணினி வழங்கியதோடு, மட்டுமல்லாமல் இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை வகுத்தது.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் ஏழைகளுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு கரும்பினை வைத்து படைப்பது நம்முடைய மரபு. ஆனால், திமுக அரசு கரும்பை தடை செய்தது.

உடனடியாக நான் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டதால் உடனடியாக பொங்கல் தொகுப்பில் செங்கரும்பினை இணைத்துக் கொண்டார்கள். ஏழைகளுக்கு எந்த ஒரு இன்னல்கள் வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது நம்முடைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அதேபோல நான் என்னுடைய ஆட்சியில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2500 பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினேன்.

அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.2,500-யை ரூ.ஐந்தாயிரமாக மாற்றித் தர வேண்டும் என அறிக்கை விட்டும்; கூட்டங்களிலும் கூறினார். ஆனால், தற்போதைய அவர்களுடைய ஆட்சியில் ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக கொடுக்கின்றார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட ஸ்டாலின் அவர்களே, நான் உளுந்தூர்பேட்டையில் இருந்து கேட்கிறேன். நீங்கள் 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். மேலும் பொங்கல் தொகுப்பு என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது என்னுடைய தலைமையிலான அதிமுக அரசு தான். மேலும் நரிக்குறவர் இன சமுதாய மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பொங்கலுக்கு ஸ்பெஷல் பஸ்கள் - அமைச்சர் சொன்ன அந்த முக்கிய தகவல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.