கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், எறையூர், குன்னத்தூர், திருநாவலூர், பரிக்கல், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது.
உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான அமைந்துள்ள வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. இதனால், உளுந்து பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி மூழ்கி அழுக தொடங்கி உள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கெனவே நிவர், புரெவி புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவசாயிகள் தற்போது மேலும் பாதிப்பை வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை பகுதி விவசாயிகள் கூறுகையில், “ போதிய வடிகால் வசதி இல்லாததாலும், இந்தப் பகுதியில் உள்ள வடிகால் குழுமிகள் சரியாக பராமரிக்க படாததாலும், இந்த பகுதியில் தண்ணீர் தேங்குகிறது.
எனவே குழுமிகளை பிரித்து புதுப்பிப்பதுடன், மழைநீர் மற்றும் வடிகால் நீர் வடிவதற்கு ஏதுவாக புதிய குழுமிகளை அமைத்து தரவேண்டும். விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைத்துறை அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வுசெய்து பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை முன்வைத்தனர்.
இதையும் படிங்க : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஏர் கலப்பை ஏந்தி பேரணி!