சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக சு. செல்வம் பணியாற்றி வருகிறார். இவர் பல பிரபலங்களின் பிறந்த நாளில் அவர்களது உருவத்தை வித்தியாசமாக வரைந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக பென்சில், பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் சிலேட் கொண்டு அன்பில் மகேஸ் பொய்யாமொழி உருவத்தை வரைந்தார்.
மேலும் அந்த ஓவியத்தில் அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் " என்ற வாக்கியத்தை எழுதியுள்ளார். கல்வித்துறையில் மிகவும் சிறப்பான பல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடு மற்றும் பேச்சு மிகவும் பிடித்ததாகவும், அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதால், பென்சில், பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், கல்வி உபகரணமான "சிலேட்டால் " அவரது உருவத்தை 25 நிமிடங்களில் வரைந்ததாக பகுதி செல்வம் வரைந்துள்ளார்.
இதையும் படிங்க:கருணாநிதி நினைவிட கட்டுமான பணியில் தொய்வு? - அமைச்சர் விளக்கம்...