கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவை, ரிஷிவந்தியம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இன்று (நவ. 12) நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், “கள்ளக்குறிச்சி நகரிலுள்ள குப்பைக் கிடங்கால் வீசும் துர்நாற்றத்தாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மனித வாழ்வின் கடைசி நிகழ்வான ஈமச்சடங்கைக்கூட மன நிம்மதியுடன் செய்ய முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள மயானத்தை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி நகராட்சியிலுள்ள குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் எனவும் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு... இடையான்சாவடி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!