கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் பகுதியிலிருந்து 3 பேர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வந்தனர். இதனால் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக ஏமப்பேர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ள மூன்றாயிரம் குடியிருப்புகளில் உள்ள பல்லாயிரம் பேர் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இப்பகுதியைச் சேர்ந்த யாரும் சமூகப் பரவலை ஏற்படுத்தி கரோனா நோய் தொற்றை கொண்டுவந்து விடக்கூடாது என்பதற்காகவும் இன்று மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் எஸ்.பி. ஜெயச்சந்திரன். சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், டிஎஸ்பி ராமநாதன், மருத்துவ அலுவலர் பங்கஜம், நகராட்சி ஆணையர் வெங்கடாசலம், ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தடையை மீறி இயங்கிய தொழிற்சாலை: சீல் வைத்த நகராட்சி ஆணையர்!