பெட்ரோல், டீசல் விலை, போர்வெல் வாகன உதிரி பாகங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போர்வெல் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அப்போது, 70க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அவர்கள், “பெட்ரோல், டீசல் விலை, போர்வெல் வாகன உதிரி பாகங்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பிப்ரவரி 16ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம்!