தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.30) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் 7 நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், மீதமுள்ள மூன்று பேர் விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டத்திலும் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதையும் படிங்க: நாகலாபுரம் சுகந்தி மீது புகாரளித்த டிக்டாக் புகழ் திவ்யா