கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல்துறை, சமூக பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் இணைந்து நடத்தும் புன்னகையைத் தேடி- 2021 என்ற சிறப்பு திட்டத்தை, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் நோக்கம் மாவட்டத்தில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதேயாகும்.
அதன்படி, இன்று(பிப்.3) கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பற்றியும், படிக்கும் குழந்தைகளை யாரும் தொழிலில் அமர்த்தக் கூடாது என்றும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பணத்திற்காக சிறைப்பிடித்து பிச்சை எடுக்கவைத்த 2 குழந்தைகளை மீட்ட போலீஸ்!