கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் அண்ணாமலை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததற்காகக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இவர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதால் இவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிடக்கோரி, காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர், ஆட்சியர் கிரண்குராலாவின் உத்தரவை அடுத்து அறிவழகனை காவல் துறையினர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'சாதி மோதலைத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும்' - தூத்துக்குடி எஸ்.பி.