தமிழ்நாட்டில் இன்று (மே 08) முதல் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று காலை முதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி, கள்ளிப்பட்டி, புளியம்பட்டி என 25க்கும் மேற்பட்ட நகர்ப்பேருந்துகள் இயங்கின.
இதில், பயணித்த பெண் கூலித் தொழிலாளர்கள் இலவச பயணம் என தெரியாமல் நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டனர். காலை நேரத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் தினந்தோறும் பயணச்சீட்டு வாங்கிய நிலையில் தற்போது இலவசம் என நடத்துநர் கூறியதால், பெண்கள் முகமலர்ச்சியுடன் பயணித்தனர்.