ETV Bharat / state

ஈரோட்டில் கணவர் கரோனாவால் உயிரிழந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை! - இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

ஈரோட்டில் கரோனாவால் கணவர் உயிரிழந்த துயரத்தை தாங்கமுடியாமல், இரண்டு குழந்தைகளுடன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

erode news  erode latest news  erode suicide news  erode women suicide with her children  women suicide with her children after husband dead at erode  women suicide with her children  women suicide with her children after husband dead  ஈரோடு செய்திகள்  தற்கொலை வழக்கு  ஈரோடு இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை  இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை  ஈரோடு திண்டலில் கணவரை இழந்த பெண் குழந்தைகளுடன் தற்கொலை
2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை...
author img

By

Published : Jun 25, 2021, 2:20 PM IST

ஈரோடு: திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரது மகள் நித்யா, தனது கணவர் பாஸ்கருடன் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ் கிருஷ்ணன் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கர் கடந்த மாதம் கரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்ததை அடுத்து நித்யா ஈரோட்டில் உள்ள தனது தந்தை இல்லத்திற்கு குழந்தைகளுடன் சென்று வசித்து வந்துள்ளார்.

குழந்தைகளுடன் தற்கொலை

இந்நிலையில் நேற்று (ஜூன்.24) படுக்கை அறைக்குச் சென்ற நித்யா நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை பார்த்தசாரதி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மகள், பேரன், பேத்தி ஆகிய மூவரும் விஷம் அருந்திய நிலையில் மயக்கத்துடன் இருந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் மூவரையும் கொண்டு சென்று சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நித்யாவும் அவரது இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரோனோவால் கணவர் உயிரிழந்த சோகம் தாங்காமல் இரண்டு குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் முதியவர் வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.