ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும்போது குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இப்பகுதியில் காட்டு யானைகள் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்காக முகாமிட்டுள்ளன.
அந்த வகையில் அதிகாலை திம்பம் மலைப்பாதையின் முதலாவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை கரும்பு லாரிகளில் இருந்து சிதறி கிடந்த கரும்புத்துண்டுகள் மற்றும் சருகுகளை உண்ணத் தொடங்கியது.
இந்த காட்சியை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் காட்டுயானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: உற்சாகத்துடன் குளியல்போட்ட ஜெயமால்யதா யானை - ஆச்சரியப்பட்ட அஸ்ஸாம் அலுவலர்கள்