ETV Bharat / state

வேளாண் வளர்ச்சித்திடல் அமைப்பு திட்டத்துக்கு வரவேற்பு - ஈரோடு அண்மைச் செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சித் திடல் அமைக்கப்படும் திட்டத்தை வரவேற்பதாக தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு பேசும் காணொலி
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு பேசும் காணொலிதமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு பேசும் காணொலி
author img

By

Published : Aug 14, 2021, 4:45 PM IST

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்ட் துறைக்கென தனி பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு பேசும் காணொலி

பனை சார்ந்த தொழில் சிறப்புறும்

அப்போது அவர் பேசுகையில், “இயற்கை வேளாண் திட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில், இயற்கை வேளாண் சந்தை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பால், விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன் பெறுவர். பனை மர பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஆட்சியர் அனுமதியைப் பெற்று அவற்றை வெட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருகிறது.

இதனால் அதனைச் சார்ந்த தொழில்கள் சிறப்புறும், இது வரவேற்கப்படக்கூடியது. விவசாயிகள், வேளாண்மை பாதிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க, தலைமை செயலர் தலைமையில் குழு ஏற்படுத்தி தீர்வு காணப்படும் என்பது வரவேற்கத்தக்கது.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 150 உயர்த்தி வழங்கியிருப்பது வரவேற்கப்படக்கூடியது ஆகும். அதேநேரம், விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கவும், நெல், கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது” என்றார்.

இதையும் படிங்க: வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.