ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் சிந்து, ஜெர்சி, செவலை, நாட்டு மாடு இனங்களை வாங்கிச் செல்ல வருவது வழக்கம்.
இந்த வாரம் நடைபெற்ற வார சந்தையில் வறட்சியின் காரணமாக மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த வார சந்தையில் 300 பசு மாடுகளும், 200 எருமை மாடுகளும், 100 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இவற்றில் பசு மாடு 16 ஆயிரம் ரூபாய் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடு 18 ரூபாய் முதல் 36 ரூபாய் வரையும், கன்றுக்குட்டி இரண்டாயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை என இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனையாகின.
இருப்பினும் தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் மாடுகளை வாங்கிச் செல்லுவதில் தயக்கம் காட்டினர்.