ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மலர்தூவி வரவேற்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள், அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

BhavaniSagar Dam
author img

By

Published : Aug 16, 2019, 10:08 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து நன்செய் பாசனத்துக்கு இன்று கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீரும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தப்பட்டு சனிக்கிழமை காலைக்குள் இரண்டாயிரத்து 300 கனஅடி நீரும் திறந்துவிடப்படவுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் உயர்மட்ட நீர் கொள்ளளவு 105 அடியாக நீர் இருப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பவானி ஆற்றிலும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஐந்தாயிரத்து 193 கனஅடியாகவும் அணையிலிருந்து கால்வாயிக்கு ஆயிரத்து 300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை-விடுத்துவந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பிரதான வாய்க்கால், சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலுக்கு கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். இன்று திறக்கப்பட்ட தண்ணீர், டிசம்பர் 11ஆம் தேதி அதாவது 120 நாள்கள் வரை நெல்சாகுபடிக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கால்வாயில் தண்ணீர் திறப்பால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திறந்துவிடப்பட்ட கால்வாய் நீர், 124 மைல் பயணித்து கடைமடைப் பகுதியான காங்கேயம் மங்களப்பட்டியை ஐந்து நாள்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

Intro:Body:சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
16.08.2019  

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு இன்று கீழ்பவானி கால்வாயில்  தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடிநீரும் அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தப்பட்டு  சனிக்கிழமை காலைக்குள் 2300 கனஅடி நீர் திறந்துவிடப்படும். கால்வாயில் திறந்த விடப்பட்ட நீரில் அமைச்சர்கள், விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் உயர்மட்ட நீர் கொள்ளளவு 105 அடியாகவும் அதாவது 32.8 டிஎம்சியாகவும் நீர் இருப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியல் பெய்த மழையால் பவானிஆற்றிலும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5193 கனஅடியாகவும் அணையில் இருந்து கால்வாயிக்கு 1300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 24 டிஎம்சியாக உள்ளது.  அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கை ஏற்று இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான வாய்க்கால் மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்காலுக்கு   கால்வாய் மதகு பட்டனை அழுத்தி அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனையடுத்து அணையில் இருந்து கால்வாயில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் துாவி வரவேற்றனர். தற்போது முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது அதனைத்தொடர்ந்து படிப்படியாக 2300 கனஅடியாக உயர்த்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்னர்.  இன்று திறக்கப்பட்ட தண்ணீர்,   டிசம்பர் 11ம் தேதி அதாவது 120 நாள்கள் வரை நெல்சாகுபடிக்கு நீடிக்கும். கால்வாயில் தண்ணீர் திறப்பால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்ட கால்வாய் நீர், 124 மைல் பயணித்து கடைமடை பகுதியாக காங்கேயம் மங்களப்பட்டியை 5 நாள்களில் சென்றடையும். இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆக. 11ம் தேதி முதல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்க ராயன் வாய்க்காலுக்கு  விநாடிக்கு 1350 கனஅடி நீர் அணையில் இருந்து ஆற்றுமதகில் திறந்துவிட்டது. இதன் மூலம் 40 ஆயிரம் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.