ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு - வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 10:49 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இதற்காக ஈரோட்டிற்கு இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெங்களூருவிலிருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் சரி செய்யும் பணியில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி செய்யப்பட்ட பின்பு இன்று (ஜன.28) தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கிழக்கு சட்டமன்ற தேர்தலில் 286 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தமாக 882 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், ”வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நாளில் 238 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு முடிந்த பின்பு பலத்த பாதுகாப்புடன் சித்தோடு போக்குவரத்து கல்லூரியில் உள்ள வாக்கு என்றும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Erode East By election: பாஜக போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது - அமைச்சர் மனோ தங்கராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.