ETV Bharat / state

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: கொடிவேரி அணையில் போலீசார் குவிப்பு - போராட்டம்

ஈரோடு: பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், கொடிவேரி அணைப்பகுதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளனர்.

கொடிவேரி அணை பகுதியில் காவலர்கள் குவிப்பு
author img

By

Published : Jul 9, 2019, 1:34 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைப்பகுதியின் உட்பகுதியிலிருந்து பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.240 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசால் நிறைவேற்ற பணிகள் தொடங்கின. அப்போது, குடிநீர் திட்டம் செயல்பட்டால் விவசாயத்திற்கு பாசனநீர் கிடைக்காது எனக்கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கொடிவேரி அணை பகுதியில் காவலர்கள் குவிப்பு

அதனால் மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அமைத்து அங்கு ஆய்வு மேற்கொண்டு கொடிவேரி அணையின் உட்பகுதியிலிருந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதன்பின், மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடிவேரி பாசன விவசாயிகளிடம் திட்டம் நிறைவேற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்த நிலையில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்துடன், தாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிவோரி பாசன விவசாயிகளுடன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் தோல்வியில் முடிவுற்றது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான பணிகளை கொடிவேரி அணைப்பகுதியில், குடிநீர் வடிகால் வாரியம் இன்று தொடங்கியுள்ளது. இப்பணியை கொடிவேரி பாசன விவசாயிகள் முற்றுகையிட்டு தடுக்க போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற என்பதாலும், பணிகள் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்திலும், கடத்தூர் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக குவிந்துள்ளனர்.

Intro:Body:tn_erd_02_sathy_kodivery_dam_ police_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைப்பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் நடைபெறுகிறது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைப்பகுதியின் உட்பகுதியிலிருந்து பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.240 கோடி செலவில் நிறைவேற்றப்பணிகள் தொடங்கிய போது கொடிவேரி அணையின் பாசன விவசாயிகள் அணையின் உள்பகுதியிலிருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். அதனால் மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு கொடிவேரி அணைப்பகுதியிலிருந்து திட்டம் செயல்படுத்தலாம் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடிவேரி பாசன விவசாயிகளிடம் திட்டம் நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்ற நிலையில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்துடன் விவசாயிகள் நேரடி பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கைவைத்திருந்தனர். அதன்அடிப்படையில் நேற்று முன் தினம் ஈரோடுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிவோரி பாசன விவசாயிகளுடன் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடியுற்ற நிலையில் கொடிவேரி பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணிகளை கொடிவேரி அணைப்பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது. இப்பணியை கொடிவேரி பாசன விவசாயிகள் முற்றுகையிட்டு தடுத்து போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற நோக்கிலும் பணிகள் பாதிகப்படக்கூடாது என்ற முறையில் கடத்தூர் காவல்துறையினர் சார்பில் 100க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் விவசாயிகள் இப்பிரச்சனை குறித்து நீதி மன்றத்தை நாடப்போவதாக தெரிவித்து பணியை தடுக்கவோ போராட்டத்தில் ஈடுபடவோ வரவில்லை. கொடிவேரி அணைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பதபதைப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.