ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்துக்குட்பட்ட முத்தம்பாளையத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு, அரசு தொடக்க பள்ளியை ஒட்டி பொது சுகாதார வளாகம் பல லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் திறப்பு விழாவுக்காக மட்டுமே திறக்கப்பட்ட கட்டடம், அன்றைய தினமே பூட்டு போடப்பட்டது. இதனையடுத்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. இதனால் கிராமப்புற பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் கிராமப்புற மக்கள், பள்ளி மாணவ–மாணவிகள் உள்ளிட்டோர் திறந்த வெளியைத்தான் கழிவறையாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாததால் சுகாதார வளாகம் புதர்மண்டி கிடக்கிறது. அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும்கூட மாநகராட்சி நிர்வாகம் பொது சுகாதார வளாகத்தை திறக்காமல் இருப்பது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ‘எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்!’ - சோளக்கொல்லையாய் மாறிப்போன கீழடி அகழாய்வுக் களம்