ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் ஊராட்சியில் வாரத்துக்கு ஒருமுறை 200 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதே ஊராட்சிக்குள்பட்ட உடையாம்பாளையம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இங்கு இதுவரை தடுப்பூசி முறையாக வழங்கப்படவில்லை. வெகுநாள்களாகத் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு இன்று (ஜூலை 21) தடுப்பூசி டோக்கன் வழங்குவதாக ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
முதலில் 50 பேருக்கு வழங்குவதாகக் கூறியிருந்த நிலையில், இன்று காலை 10 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த கிராமத்தினர் கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுகாதாரத் துறை சார்பில் மேலும் 50 பேருக்கு டோக்கன் வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த மறியல் காரணமாக சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்த கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை - சென்னை மாநகராட்சி