ஈரோடு: பெரியவலசு இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், மாணிக்கம் செல்வி (40). திருநங்கையான இவர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "நான் சொந்தமாக தறிப்பட்டறை, டிராவல்ஸ், நிதி நிறுவனம் மற்றும் சிறு, சிறு தொழில் செய்து வருகிறேன்.
திருநங்கைப் புகார்
ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கடந்த 3 மாதங்களாக, என்னை போனில் தொடர்பு கொண்டு ரூ. 25 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் கடத்தி விடுவேன் என மிரட்டி வருகின்றனர்.
மிரட்டல் விடுக்கும் 4 பேர் மீதும் ஏற்கெனவே, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனது குடும்பத்தாரையும் அவர்கள் நேரடியாகவும், போனிலும் மிரட்டி வருகின்றனர்.
பணம் கேட்டு கும்பல் மிரட்டல்
இதனால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 4 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்