ஈரோடு: ஈரோட்டில் சில நாள்களுக்கு சாலையோர கடையில் பானி பூரி சாப்பிட்ட எம்சிஏ பட்டதாரி ரோகிணி தேவி (34) உயிரிழந்தது தொடர்பாக, ஈரோடு தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காளைமாடு சிலை, டெலிஃபோன் பவன் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலையோர கடைகளில் ஆய்வு
அப்போது தரமான பொருள்களால்தான் உணவு தயார் செய்யப்படுகிறதா? அன்றைய தினம் தயார் செய்த உணவு பொருள்கள்தான் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது.
சோதனையில் பெரும்பாலான சாலையோர கடைகள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் நடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விரைவில் உரிமங்களைப் பெற்று கடைகள் இயக்கவும் அலுவலர்கள் சார்பில் எச்சரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை