ETV Bharat / state

ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்; விவசாயிகள் கவலை! - தக்காளி விலை குறைவு

ஈரோடு : தாளவாடி மலைப்பகுதியில் தக்காளியின் விலை கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தக்காளியின் விலை சரிவு
author img

By

Published : Aug 29, 2019, 9:52 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளியை, தாளவாடியில் உள்ள ஏல விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

தக்காளியின் விலை சரிவு.

தற்போது கேரளாவில் அதிகளவில் மழை பெய்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அங்கு சரிவர விற்பனையாவதில்லை. மேலும், தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதால் அதிக விலைக்கு வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 150 க்கும், ஒரு கிலோ ரூ.5-க்கும் மட்டுமே விற்பனையாகின்றது.

இதனால் தக்காளி பறிப்பதற்கு கூலி வழங்குவதற்குகூட கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Intro:Body:tn_erd_01_sathy_tomoto_vis_tn10009
tn_erd_01a_sathy_tomoto_vis_tn10009

தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி விலை கிலோ ரு.5 ஆக வீழ்ச்சி:
28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 150 க்கு விற்பனை

தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி வரத்து அதிகம் காரணமாக அதன் விலை கிலோ ரூ.5 ஆக சரிந்தது. கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளி செடியிலிருந்து பறிக்கப்பட்டு தாளவாடியில் உள்ள ஏல விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். தற்போது கேரளாவில் அதிக மழை பெய்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அங்கு சரிவர விற்பனையாவதில்லை. மேலும் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதால் அதிக விலைக்கு வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 300 முதல் ரூபாய் 500 வரை விற்ற நிலையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 150 க்கு மட்டுமே விற்பனையானது. அதாவது கிலோ ரூ.20 வரை விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.5 ஆக சரிந்துள்ளது. இதனால் தக்காளி பயிரிட்டுள்ள தாளவாடி மலை கிராம விவசாயிகள் செடியிலிருந்து தக்காளி பறிக்கும் கூலி வழங்குவதற்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். தக்காளி ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் உற்பத்தி செலவாகும் நிலையில் அதனை பறித்து விற்கும்போது 50 ஆயிரம் கிடைப்பதால் தக்காளி விவசாயம் கேள்விகுறியாகி உள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.