ETV Bharat / state

'தெலங்கானா காவல்துறையை தமிழ்நாடு போலீஸ் பின்பற்ற வேண்டும்' - Telangana veterinarian rape and murder case

ஈரோடு: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாநில காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறையினரும் பின்பற்ற வேண்டும் என தமாகா நிர்வாகி யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமக இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.யுவராஜா
தமக இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.யுவராஜா
author img

By

Published : Dec 9, 2019, 12:14 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவர் எம். யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதனைப் பின்பற்றி அதுபோன்ற கொடுமையில் ஈடுபடுவர்களை தமிழ்நாட்டு காவல் துறையினரும் கடுமையான தண்டனை வழங்கிட முன்வர வேண்டும்.

பொள்ளாச்சி சம்பவத்தில் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் காவல் துறையினர் விசாரணையை மிகவும் காலம்தாழ்த்தி நடத்தி வருவதுடன் குற்றவாளிகள் மீதான குண்டர் தண்டனையை ரத்து செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை மீண்டும் பதிவு செய்து விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து அதில் தொடர்புடையவர்களையும் கைது செய்திட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த யுவராஜா

மேலும், ‘மத்திய அரசு வெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசும், நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை விநியோகிக்க தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சி 4.5 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 64 சதவிகித சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, ஜவுளிக் கடைகள், வாரச்சந்தைகள் என 58 சதவிகிதம் பாதிக்கப்பட்டு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு வரிவிதிப்பில் உரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

Intro:ஈரோடு ஆனந்த்
டிச07

பொங்கலுக்கு பின் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த நடவடிக்கை தேவை ; தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா!

ஈரோடு: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒரே கட்டத்தில் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் காலந்தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.யுவராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஜனவரி மாத இறுதிக்குள் 9 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஒரே கட்டமாக நடத்துவதற்குரிய நடவடிக்கையை தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவே மக்கள் பிரச்னைகளை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும் என்பதால் காலம் தாழ்த்தாமல் தேர்தலை நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக,த.மா.கா கூட்டணி இடைத் தேர்தல் வெற்றியைப் போலவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியாக தொடரும் என்றும், திமுக கூட்டணி கட்சியினரிடையே ஒற்றுமை இல்லை அவர்களது கொள்கையில் மக்கள் நலன் இல்லை என்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியே திமுக கூட்டணியின் இறுதி வெற்றியென்றும் அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Body:தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதனைப் பின்பற்றி அதுபோன்ற கொடுமையில் ஈடுபடுவர்களை தமிழக காவல்துறையினரும் கடுமையான தண்டனை வழங்கிட முன்வர வேண்டும் என்றும், பொள்ளாச்சி சம்பவத்தில் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் காவல்துறையினர் விசாரணையை மிகவும் காலந்தாழ்த்தி நடத்தி வருவதுடன் குற்றவாளிகள் மீதான குண்டர் தண்டனையை ரத்து செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை மீண்டும் போடுவதுடன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்து அதில் தொடர்புடையவர்களையும் கைது செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Conclusion:மத்திய அரசு வெங்காய விலை அதிகரிப்புக்கு பொறுப்பு ஏற்றிட வேண்டும் என்றும், வெங்காய விலையை கட்டுப்படுத்தி விலையை குறைத்து விற்பனை செய்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழக அரசு வெங்காயத்தை நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விநியோகித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட யுவராஜா சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சி 4.5 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 64 சதவிகித சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி,ஜவுளிக் கடைகள், வாரச்சந்தைகள் என 58 சதவிகிதம் பாதிக்கப்பட்டு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு வரிவிதிப்பில் உரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

பேட்டி : எம்.யுவராஜா - ,மாநிலத் தலைவர்,த.மா.கா இளைஞர் பிரிவு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.