ETV Bharat / state

சாமி கும்பிட வந்த பெண்ணிடம் திருடிய மூன்று பெண்கள் கைது - தாளவாடி திடுட்டு

ஈரோடு: சாமி கும்பிட வந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடிய மூன்று பெண்களை தாளவாடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருடிய 3 பெண்கள்
திருடிய 3 பெண்கள்
author img

By

Published : Mar 3, 2020, 12:22 PM IST

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி, அன்னை வீதியைச் சேர்ந்தவர் சுசீலா. இவர் தாளவாடி மாரியம்மன் கோயில் அருகே உள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி கும்பிடும்போது, தனது கையிலிருந்த பையை கீழே வைத்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்கள், பையை திருடியுள்ளனர்.

சாமி கும்பிட வந்த பெண்ணிடம் திருடிய சம்பவம்

இதனிடையே, ஆயிரம் ரூபாயுடன் இருந்த பையை காணாத சுசீலா, கோவிலைச் சுற்றித் தேடிப்பார்த்துள்ளார். பின்னர் தாளவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தாளவாடி - தலமலை சாலையில் சிஎஸ்ஐ சர்ச் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூன்று பெண்களைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில், கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த ஜானகி, பவுதாள், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த மாலா ஆகிய மூன்று பேரும் கோவிலில் சுசீலாவின் பையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேர் மீது வழக்கு பதிந்த காவல் துறையினர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’திமுகவுக்கு வாக்களித்தால் கணவருக்குச் சோறு போடாதீர்கள்’ - இல்லத்தரசிகளிடம் வேண்டுகோள்விடுத்த கே.சி. கருப்பணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.