ETV Bharat / state

நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர் - கிராம மக்கள் சோகம்! - Villagers

தெருக்கூத்து கலைஞர் ஒருவர், நடிக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்தது கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர் - கிராம மக்கள் சோகம்!

author img

By

Published : Jul 18, 2022, 10:14 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி, குப்பந்துறையில் 25-க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் கிராமந்தோறும் திருவிழா காலங்களில் பாரம்பரிய தெருக்கூத்து நடத்தி வருகிறார்கள். இதில் குப்பந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் ராஜய்யன், தெருக்கூத்து கலைஞர்களை ஒருங்கிணைத்து நடத்துபவர்.

நாரதர் நரசிம்மன் வேடத்தில் நடிக்கும் தனிசிறப்பும் பெற்றவர். தற்போது திருவிழா இல்லாததால், மழை வேண்டி குப்பந்துறையில் 5 நாள்கள் நடைபெறும் இரண்யா தெருக்கூத்து நடைபெற்றது. இதில் ஞாயிற்றுக்கிழமை முதல், விடிய விடிய தெருக்கூத்து நடந்தது. இந்த தெருக்கூத்தில் 25 நாடகக் கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர்.

நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர் - கிராம மக்கள் சோகம்!

அப்போது ராஜய்யன் வேகமாக ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டத்தை நிறுத்தி மேடையிலேயே சரிந்தார். அங்கிருந்த பார்வையாளர்கள் நாடகம் என நினைத்த நிலையில், மேடையிலிருந்த நாடக கலைஞர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரான குப்பந்துறைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கரோனா பரவல் காரணமாக தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், தெருக்கூத்து கலைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: பிரதாப் போத்தன் என்னும் வித்தியாச கலைஞன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.