ETV Bharat / state

'அடிப்படை வசதிதானே கேக்குறோம்' - நியாயம் கேட்ட வன கிராம மக்கள் மீது வழக்கு! - Thengumarahada proples protest in sathiyamangalam

ஈரோடு: சாலை வசதி, உயர்மட்ட பாலம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் மீது சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

thengumarahada-village-peoples-struggle-due-to-road-issue
author img

By

Published : Nov 16, 2019, 12:17 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய மூன்று வன கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

அடர்ந்த வனப்பகுதியிலிருக்கும் இந்த வன கிராமங்களில் உள்ள கரடுமுரடான மண் சாலை வழியாக 20 கி.மீ. தூரம் பயணித்து பின்னர் அங்குள்ள மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் இந்த வனகிராம மக்கள் சாலை வசதி, மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு 100 பெண்கள், 150 ஆண்கள் என 250 பேர் திரண்டு சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் சாலையில் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தெங்குமரஹாடா வன கிராம மக்கள்

இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வனகிராம மக்கள் மீது சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்திய வனகிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வன கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!

Intro:Body:tn_erd_02_sathy_marial_arrest_vis_tn10009
tn_erd_02a_sathy_marial_arrest_byte_tn10009

சாலை வசதி, உயர்மட்ட பாலம் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தெங்குமரஹாடா வனகிராமத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட 250 பேர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு

சத்தியமங்கலம் அடுத்துள்ள அடாந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய 3 வன கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த வன கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண்சாலை வழியாக 20 கிலோமீட்டர் துரம் பயணித்து பின்னர் அங்குள்ள மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த வனகிராம மக்கள் சாலை வசதி மற்றும் மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு 100 பெண்கள், 150 ஆண்கள் என 250 பேர் திரண்டு சத்தியமங்கலம் ரூ கோபிசெட்டிபாளையம் சாலையில் ஒரு மணி நேரம் நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வனகிராம மக்கள் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடத்திய வனகிராம மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் வன கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.