ETV Bharat / state

குழந்தைகளுக்கான தொட்டில் கடையில் திருட்டு - திருடன் கைது!

ஈரோடு: புன்செய்புளியம்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கான தொட்டில் கடையில் கொள்ளையடித்த திருடனைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவனுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்களை தேடிவருகின்றனர்.

குழந்தைகளுக்கான தொட்டில் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது
author img

By

Published : Oct 8, 2019, 6:20 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியை சேர்ந்தவர் பேரானந்தம் (37). இவர் பவானிசாகர் ரோட்டில் எஸ்ஆர்டி தியேட்டர் அருகே குழந்தைகளுக்கான தொட்டில் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். பேரானந்தமும், அவருடைய மனைவி சுமதியும் கடையை கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி கடைக்கு வந்த நான்கு பெண்கள், ஒரு ஆண் உள்பட ஐந்து பேர், கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து, பணப்பெட்டியில் இருந்த, ரூபாய் 13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். புன்செய்புளியம்பட்டி காவல் துறையினர், கடையில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து கும்பலை தேடி வந்தனர். இதனையடுத்து புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் காவல் துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

குழந்தைகளுக்கான தொட்டில் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

அப்போது சந்தேகம்படும்படியாக திரிந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் பங்களாபுதூரை அடுத்த காடையம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளைபோன கடையில் நான்கு பெண்களுடன் சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்த காவல் துறையினர் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கொள்ளையில் தொடர்புடைய, நான்கு பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி கடையில் மது விற்பனை - ரூ.80,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்!

Intro:Body:tn_erd_05_sathy_theft_arrest_vis_tn10009

புன்செய் புளியம்பட்டி கடையில் கொள்ளையடித்த ஆசாமி கைது; பெண்களுக்கு வலைவீச்சு

புன்செய் புளியம்பட்டியை சேர்ந்தவர் பேரானந்தம் (வயது 37). இவர் பவானிசாகர் ரோட்டில் எஸ்.ஆர்.டி., தியேட்டர் அருகே குழந்தைகளுக்கான தொட்டில் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். பேரானந்தமும், அவருடைய மனைவி சுமதியும் கடையை கவனித்து வருகிறார்கள்.

கடந்த மாதம், 26ல் கடைக்கு வந்த, நான்கு பெண்கள், ஒரு ஆண் உட்பட ஐந்து பேர், கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து, பணப்பெட்டியில் இருந்த, 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். புன்செய்புளியம்பட்டி போலீசார், கடையில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், போலீசார், ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக திரிந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். பங்களாபுதூரை அடுத்த காடையம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 26, என்பது தெரிந்தது. பேன்சி கடையில் நான்கு பெண்களுடன் சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர். கொள்ளையில் தொடர்புடைய, நான்கு பெண்களை தேடி வருகின்றனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.