ETV Bharat / state

வேலை நிறுத்தத்தால் ஈரோட்டில் பாதிப்பு இல்லை! - nationwide trade union strike

ஈரோட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கைன் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

banth
வேலைநிறுத்தம்
author img

By

Published : Jan 8, 2020, 3:09 PM IST

பொருளாதார கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத போக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். வங்கி மற்றும் தபால் ஊழியர்கள் பெரும்பான்மையானோர் பணியைப் புறக்கணித்ததால் தினசரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டன. மற்ற பேருந்துகள் அதிமுகவைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்களைக் கொண்டு வழக்கம்போல இயக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஆட்டோக்களும் வழக்கம்போல ஓடின. ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்துள்ளதால் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஈரோட்டில் வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன08

ஈரோட்டில் வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை!

ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதுடன், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கு எவ்வித சிரமம் ஏற்படவில்லை. ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்துள்ளதால் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், பொருளாதார வீழ்ச்சியை சரி செய்திட வேண்டும், வேலைவாய்ப்பை அதிகரித்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 4 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது.

1000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் முன்னெச்சரிக்கையாக தொலைதூர பேருந்துகள் மட்டும் 20 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தொழிற்சங்கத்தினர் வேலையைப் புறக்கணித்துள்ள போதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தோல்வியடையச் செய்திடும் வகையில் அதிமுக பேருந்து ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் மாற்று ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் 100 ஆட்டோக்கள் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், வாடகை கிடைப்பதே அரிதாகவுள்ள சூழலில் வாழ்வாதாரத்தை கருதி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Body:வங்கிகளைப் பொறுத்தவரை வங்கி ஊழியர்கள் பெரும்பான்மையானோர் பணியைப் புறக்கணித்துள்ளதால் வங்கிச் சேவை பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். Conclusion:அதேபோல் தபால் ஊழியர்களும் ஒட்டுமொத்த விடுப்பை எடுத்துள்ளதால் தபால் சேவையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பேட்டி : கிருஷ்ணன்,ஈரோடு – ஆட்டோ ஓட்டுநர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.