ETV Bharat / state

12வது உலக தமிழர் தொழிலதிபா்கள் மாநாடு! ஓமனில் நடைபெறுகிறது!

தி ரைஸ் எழுமின் அமைப்பின் சாா்பில், 12-வது உலக தமிழர் தொழிலதிபா்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நவம்பா் 24, 25, 26 ஆம் தேதிகளில் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘தி ரைஸ்’ அமைப்பின் 12-வது உலக தமிழர் தொழிலதிபா்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு
ஜெகத்கஸ்பர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 2:17 PM IST

‘தி ரைஸ்’ அமைப்பின் 12-வது உலக தமிழர் தொழிலதிபா்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு

ஈரோடு: உலகத்தில் உள்ள தமிழர் தொழில் அதிபர்கள் மற்றும் திறமையான தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தி ரைஸ்’ எழுமின் அமைப்பின் சாா்பில், 12-வது ‘உலக தமிழர் தொழிலதிபா்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு’ நவம்பா் 24, 25, 26 ஆம் தேதிகளில் ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டில் நடைபெற உள்ளது.

உலகத்தில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் தொழில் அதிபர்களில் தமிழர்களையும், திறமை இருந்தும் தொழில் முனைவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ள தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், தி ரைஸ் என்கிற தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக தொழிலதிபா்கள் மாநாடு குறித்து, ஈரோட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழர்கள் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாட்டை முன்னெடுத்து வருகிறோம். தமிழர்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் பொருட்கள், உலக பொருளாதாரத்தில் கொண்டு சேர்க்க தூண்டுகோலாக செயல்பட்டு வருகிறோம்.

இதையும் படிங்க: சங்கடஹர சதுர்த்தி விஷேசம் : தேனி ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் தரிசனம்!

இந்நிலையில், இந்த ஆண்டு உலக தொழிலதிபா்கள் மாநாடு, ஓமன் நாட்டின் தலைநகரில் வரும் 24, 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற்ற உள்ளது. இதில் 35 நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், திறனாளர்கள் கலந்து கொள்கிறார்கள். ஓமன் நாட்டு அரசு இந்த மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பை அளிக்கிறது. ஓமன் நாட்டின் மூன்று மூத்த அமைச்சர்கள் முதலீடு, சிறு குறு தொழில் உள்ளிட்ட மீன் வளம், வேளாண் துறை சார்ந்த உயர் அமைப்புகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இதுவரை இந்த மாநாட்டில் பங்கேற்க உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் 500 தமிழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த மாநாட்டை தமிழகத்தில் உள்ள தமிழர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். இதற்கு முன்னதாக எழுமின் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கட்டாய ஓய்வு பெற்ற இரிணா! விடை பெற்ற இரிணா மோப்ப நாய்க்கு சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.