ஈரோடு: பவானி அருகே ஆர்என் புதூரில் அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு கருமுட்டை வழக்கு சிறுமியும் இந்த காப்பகத்தில் உள்ளார்.
இங்கு தங்கி இருக்க விரும்பாத சிறுமிகள் மற்றும் கருமுட்டை வழக்கு சிறுமி உள்பட 7 பேரும், காப்பக நிர்வாகி கவனிக்காத சமயத்தில் அங்கிருத்து தப்பி வெளியேறினர். இது குறித்து காப்பக நிர்வாகி சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அடுத்த சில மணி நேரத்தில் சிறுமிகளை மீட்டனர்.
பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு, குழந்தைகள் நல குழுமத்தில் இன்று ஆஜர்படுத்தினர். காப்பகத்தில் இருந்து அனுப்புமாறு பல முறை கோரிக்கை விடுத்து வரும் கருமுட்டை விற்பனையில் பாதிக்கப்பட்ட சிறுமி, ஏற்கனவே ஒருமுறை கழிவறை தூய்மைபடுத்த பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவனின் உடல் பாகங்களை வெட்டி முட்புதரில் வீசிய மனைவி: டெல்லியில் அரங்கேறிய அடுத்த நிகழ்வு