ETV Bharat / state

ஊரடங்கால் சுத்தமான கால்வாய் - விவசாயிகள் மகிழ்ச்சி - Erode dye industries

ஈரோடு: கரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் கலக்காததால் காலிங்கராயன் கால்வாய் தண்ணீர் பல ஆண்டுகளுக்கு பிறகு சுத்தமாக காணப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுத்தமான கால்வாய்
சுத்தமான கால்வாய்
author img

By

Published : Apr 27, 2020, 11:41 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் கால்வாயின் மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்தக் கால்வாயின் வலது மற்றும் இடது கரையோரங்களில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் முறையற்ற நிலையில் 500க்கும் மேற்பட்ட சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் காரணமாக தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கால்வாயில் கலந்தது.

சுத்தமான கால்வாய்

இதன் காரணமாக கால்வாயின் தண்ணீர் முழுமையாக மாசடைந்ததுடன் அதனைப் பயன்படுத்திய விவசாய நிலங்களும் மாசடைந்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் கால்வாயைப் பாதுகாத்திட போராடியும் எந்த பயனும் இல்லை.

தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக மே 3ஆம் தேதிவரை ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் காலிங்கராயன் கால்வாயில் தொழிற்சாலை ரசாயனம் கலக்காததால் தண்ணீர் சுத்தமாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி தங்கராஜ் கூறுகையில், "தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் கலப்பதால் கால்வாய் தண்ணீர் மிகவும் மோசமாக இருந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் கால்வாயில் ரசாயனம் கலக்காததால் தண்ணீர் சுத்தமாகக் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.