ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பன்னாரி அம்மன் கோயிலில் எண்ணப்பட்ட மாதாந்திர உண்டியல் காணிக்கை ரூ. 71 லட்சத்தை தாண்டியது. மொத்தமுள்ள 20 உண்டியல்கள் திறக்கப்பட்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.டி பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களுடன் ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்களும், உள்ளிட்டோரும் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்த உண்டியல் வசூல் 71 லட்சத்து 5 ஆயிரத்து 492 ரூபாய், 492 கிராம் தங்கம், 9600 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையரும், பன்னாரி அம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, ஈரோடு இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நந்தகுமார், கோயில் பரம்பரை அறங்காவலர்கள், ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: விநாயகர் கோயிலில் முன்மண்டபம் கட்ட இந்து முன்னணியினர் எதிர்ப்பு