ஈரோடு: அடுத்த வில்லரசம்பட்டி கருவில் பாறை வலசு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி சுற்றி நடை பயிற்சி மேற்கொள்ள பாதைகள் அமைத்து சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி அமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டது.
அனைத்து பணிகளும் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் படகு சவாரியை திறக்க வில்லை, அதே போல சிறுவர் பூங்காவும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பூங்கா பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் பூங்கா பகுதிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவையும் படகு சவாரியும் புனரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கட்டணமில்லா கல்வித்திட்டத்தின்கீழ் படிக்க 199 பேர் தேர்வு... சென்னைப்பல்கலை. துணைவேந்தர்