ETV Bharat / state

குடிசை எரிந்து தாய், மகள் உயிரிழப்பு: சொத்துக்காக உறவினர்களே தீ வைத்தது அம்பலம்

author img

By

Published : Jul 6, 2019, 12:25 PM IST

ஈரோடு: குடிசை தீப்பற்றி எரிந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சொத்துக்காக உறவினர்களே தீ வைத்தது அம்பலமாகியுள்ளது.

குடிசைக்கு தீ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள்(40). இவரது கணவர் நாகண்ணா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதனால், ராஜம்மாள் தனது மகன் மாதேவபிரசாத்(20) மகள் கீதா(18) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 10 நாட்களுக்கு முன் தனக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தில் குடிசை அமைத்து குடியேறியுள்ளார்.

இந்நிலையில், ராஜம்மாளின் மகன் மாதேவபிரசாத் மூன்று நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த புதன்கிழமையன்று ராஜம்மாள் மற்றும் மகள் கீதா ஆகியோர் குடிசையில் இருந்தபோது, திடீரென குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில், ராஜம்மாள், மகள் கீதா இருவரும் தீயில் கருகி பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற தாளவாடி போலீசார், இறந்தவர்களின் உடல்களை ஆய்வு செய்ய சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் என்பவரை வரவழைத்து இருவரது உடல்களும் அங்கேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சொத்து பிரச்னை காரணமாக குடிசைக்கு தீ வைத்து அவர்களை கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை சிக்குமாதேகவுடா, தாயார் சிவமல்லம்மா, சகோதரர் பிரேஸ், மாமியார் தொட்டமாதம்மா மற்றும் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தை அபகரிக்க குடிசைக்கு தீ வைத்து கொல்லப்பட்டதாக வாக்கு மூலத்தில் உறவினர்கள் தெரிவித்தனர்.

Intro:tn_erd_01_sathy_murder_death_photo_tn10009
tn_erd_01a_sathy_murder_death_photo_tn10009

tn_erd_01a_sathy_murder_arrest_photo_tn10009Body:தாளவாடி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: சொத்துக்காக தீ வைத்து கொலை செய்ததது அம்பலம்: 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக குடிசைக்கு தீ வைத்து தாய் மகளை கொலை செய்தததாக 4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை தாளவாடி போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த நாகண்ணா என்பவரது மனைவி ராஜம்மாள். (வயது 40.) நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மாதேவபிரசாத் (வயது 20) என்ற மகனும் கீதா (18) மகளும் உள்ளார். ராஜம்மா தனது மகள் மற்றும் மகனுடன் அதே ஊரில் உள்ள தனது தாய்தந்தை வசித்து வந்த வீட்டில் இருந்தபடி கூலி «வைலக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜம்மா அதே ஊரில் உள்ள ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் தனியாக குடிசை அமைத்து குடியேறியுள்ளார். மகன் மாதேவபிரசாத் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜம்மாவின் குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் ராஜம்மாள், கீதா இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்போது இருவரின் உடல்களும் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் என்பவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து இருவரது உடல்களும் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். சொத்து பிரச்னை காரணமாக குடிசை வீட்டில் தீ வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை சிக்குமாதேகவுடா, ராஜம்மாளின் தாயார் சிவமல்லம்மா, ராஜம்மாளின் மாமியார் தொட்டமாதம்மா, ராஜம்மாளின் தம்பி பிரேஸ் உறவினர்கள் மாதேவம்மா, நாகரத்தினா, லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தீவைத்து கொல்லப்பட்டதாக வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.