ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற கனிமார்க்கெட் ஜவுளி சந்தை உள்ளது. தினசரி சந்தை, வாரச்சந்தை என இந்தச் சந்தையில் ஆயிரத்து 500 கடைகள் உள்ளன.
தற்போது சீர்மிகு நகர் திட்டத்தில் 54 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக தினசரி ஜவுளி கடைகளுக்கு மாற்றாக தற்காலிகக் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைவேலு, மனோரஞ்சிதம் உள்ளிட்டோருக்கு முறையாக கடைகள் ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கடைகளைப் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றினர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதோடு கடையில் உள்ள ஜவுளிகளை வெளியே எடுக்க அலுவலர்கள் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்த வியாபாரிகள், இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: எட்டாவது நாளாக தொடரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்